Posts

Showing posts from October, 2023

Kadal Nencham

                                              காதல்  நெஞ்சம்  * அன்பே !  ஆருயிரே1.. அடிக்கோடிட்டு நீ,  சொன்ன வார்த்தைகள்    மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று  அழியாதவைகள் ! * காட்சி அளிக்கும்படி  கரும்பலகையில்  எழுதி வைச்ச காதல் அல்ல !  துடைப்பான் கொண்டு  துடைப்பதற்கு முயல்வது நல்லது  அல்ல ! * ஒப்பந்தம் போட்டு  உண்டானது இல்லை   உன் நினைவுகள்    உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல ! *என்னை நீ மறந்து விடு'  என்று சொல்லும் போது தான் ஊற்று நீராய் சுரக்கிறது  உன் நினைவுகள் இல்லா உலகில் ! உன்னுடன் மயங்கி நின்றேன்   உள்ளதால் நெருங்கி வந்தேன்  என்னுயிர் காதலி  !   என்னுயிர் தேவதையே  என்பேன் !!   * அந்தி மழையின்  மண் வாசனை  அதனின் பங்கிற்கு  உருட்டிச் செல்கிறது   உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !...